
கோவையில் தாய், மகளை கொலை செய்த வழக்கு: மகனின் படத்தை அச்சிட்டு தேடும் போலீஸார்
கோவை அவிநாசி சாலையில் தாய், மகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த தாயின் மகன் புகைப்படத்தை
கோவை அவிநாசி சாலையில் தாய், மகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த தாயின் மகன் புகைப்படத்தை நோட்டீஸாக அச்சிட்டு தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் மருத்துவமனை எதிரில் உள்ள பழைமையான கட்டடத்தில் கடந்த 24-ஆம் தேதி எரிந்த நிலையில் இரு சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையுண்ட நபர்கள் பாப்பாத்தி (70) மற்றும் அவரது மகள் கீதா (38) என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், பாப்பாத்தியின் மகன் சுரேஷ் என்கிற சரவணக்குமார் (35) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாயமாகியுள்ளார்.
இந்நிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாப்பாத்தியின் சொத்துக்களை அபகரிக்க சரவணக்குமார் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாப்பாத்தியின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாப்பாத்தி, கீதா ஆகியோரை அவ்வப்போது சரவணக்குமார் அடித்து சித்திரவதை செய்து வந்ததாக கூறியுள்ளது போலீஸாரின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சரவணக்குமாரின் புகைப்படம் மற்றும் அவரது முழு விவரங்களை அச்சிட்டு பேருந்து நிலையங்கள், ரயில், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் விநியோகித்து வருகின்றனர். மேலும், சரவணக்குமாரைப் பற்றிய விவரம் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி் எண்களையும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தாய், மகளை கொலை செய்த வழக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். எனினும் தற்போதைய நிலையில் தலைமறைவாக உள்ள சரவணக்குமார் பிடிபட்டால் மட்டுமே கொலையாளி யார் என்பது தெரியவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




