செங்கோட்டை - புனலூர் இடையே அகலப்பாதை பணி மற்றும் செங்கோட்டை ரயில்வே பணிமனை புனரமைப்பு பணி நடைபெறுவது காரணமாக மார்ச் 25,26,27, 28 ஆம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு.
மார்ச் 25 ஆம் தேதி:
ரயில் எண் 56735: மதுரை - செங்கோட்டை பாஸஞ்ஜர் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 56799: திருநெல்வேலி - செங்கோட்டை பாஸஞ்ஜர் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து புறப்படாமல் தென்காசியில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரம்:
ரயில் எண் 12661 - 12662: சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு
ரயில் எண் 56731 - 56732: மதுரை - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56733 - 56734 : மதுரை - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56735 - 56736: மதுரை - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56801 - 56800 : திருநெல்வேலி - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56797 - 56798: திருநெல்வேலி - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56803 - 56802: திருநெல்வேலி - செங்கோட்டை பாஸஞ்ஜர்
ரயில் எண் 56799: திருநெல்வேலி - செங்கோட்டை பாஸஞ்ஜர்
மார்ச் 28 ஆம் தேதி:
ரயில் எண் 56796: செங்கோட்டை - திருநெல்வேலி பாஸஞ்ஜர் ரயில் தென்காசியில் இருந்து இயக்கப்படும்.
ரயில் எண் 56732: செங்கோட்டை - மதுரை பாஸஞ்ஜர் ரயில் தென்காசியில் இருந்து புறப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






