கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து எர்ணாகுளம், திருநெல்வேலிக்கு சிறப்பபு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 00601: ஏப்ரல் 13 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுகல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில் ரயில் எண் 00602: ஏப்ரல் 17 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுகல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்ரயில் எண் 00605: ஏப்ரல் 13 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 00604: ஏப்ரல் 17 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






