தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நமச்சிவாயத்தின் உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை மேலிடம் தரும்: சின்னாரெட்டி

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி மேலிடம் தரும் என மேலிட பொறுப்பாளரும், தேசிய செயலாளருமான சின்னா ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2016, 2:02 pm

சுஜித்குமார்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி மேலிடம் தரும் என மேலிட பொறுப்பாளரும், தேசிய செயலாளருமான சின்னா ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெறற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்  நமச்சிவாயம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதற்காக நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதனால் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்து சாலை மறியல், பேருந்துகள் மீது கல்வீச்சு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வில்லியனுரில் தனது வீட்டில் இருந்த கட்சித் தலைவர் நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சின்னா ரெட்டி இன்று நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.

பின்னர் சின்னா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு நமச்சிவாயத்தின் உழைப்பை கட்சி தலைமை நன்கு அறியும். அவருக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி மேலிடம் அளிக்கும்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை கட்சித் தலைவர் நமச்சிவாயமும், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் நாராயணசாமியும், துணைநிலை ஆளுநரிடம் அளிப்பார்கள். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை.

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பர். கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளருடன் அமைச்சரவை குறித்து நாராயணசாமி கலந்து பேசி அனுமதி பெறுவார்.

கிரண்பேடியை ஆளுநராக நியமிக்க மத்திய பாஜக அரசுக்கு உரிமை உள்ளது. ஆளுநர் அவருக்கு உள்ள வழிமுறைகளின்படி செயல்படுவார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவர்களுக்கு உள்ள வழிமுறைகளின்படி செயல்படுவர். இதில் எங்கே மோதல் ஏற்படப்போகிறது.

காங்கிரஸ் அரசு பதவி ஏற்கும் தேதி குறித்து மாநில தலைவர் நமச்சிவாயம் முடிவு செய்வார். அவர் செய்த சேவைகளை கட்சி மறந்து விடாது. அவரது பலத்தையும் அறிந்துளளோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் நமச்சிவாயத்துக்கு உரிய மரியாதையை தரும் என்றார் சின்னாரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.