விருதுநகரில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த திமுக நிர்வாகி கைது

விருதுநகரில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார் என்பவரை திங்கள்கிழமை போலீஸர் கைது செய்தனர்.
Updated on
1 min read

விருதுநகர், 

விருதுநகரில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார் என்பவரை திங்கள்கிழமை போலீஸர் கைது செய்தனர்.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(58), மனைவி மகாலெட்சுமி (54). இவர்களுக்கு கார்த்திகேயன்(29), மனோஜ்குமார்(27) என இரண்டு மகன்கள், நர்மதா (22) மகள் உள்ளனர். இதில், ராஜேந்திரன், கார்த்திகேயன் அமெரிக்கா வில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துராமன்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் கிருஷ்ணகுமார்(38) என்பவர், மகாலெட்சுமி வீட்டில் கார் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள் ளார். இவர், தற்போது விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

இந்த சூழ்நி லையில், மகாலெட்சுமியின் மகளுக்கு திருமண தோஷம் இருப்பதால், அவர் திருமணம் செய்யும் கணவருக்கு ஆபத்து உள்ளதாக கிருஷ்ண குமார் கூறினாராம். இதையடுத்து பல்வேறு இடங்களில் ஜோசியம் பார்த்துள்ளனர். இதை யடுத்து கிருஷ்ணகுமார், நான் நர்மதாவை பதிவு திருமணம் செய்து கொள்கிறேன். பின்னர், சில நாட்களில் அந்த ரத்து செய்து விடுகிறேன் என கூறினாராம். இதை நம்பி மகாலெட்சுமிய்ன் ஒப்புதலின் பேரில்,

நர்மதாவை கிருஷ்ணகுமார் 20.08.2015 இல் கமுதி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால், கூறியது போல் கிருஷ்ணகுமார், திருமண பதிவை ரத்து செய்ய மறுத்தாராம். ஏற்கனவே கிருஷ்ண குமாரை நம்பி மகாலெட்சுமி வங்கி காசோலை மற்றும் நகைகளை கொடுத்திருந்தாராம், அதையும் அவர் திருப்பி தர மறுத்து விட்டராம்.

இந்த நிலையில் நர்மதா, கிருஷ்ணகுமார் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக 25.10.2015 இல் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், நர்மதா விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கிருஷ்ண குமார் முகநூலில் நர்மதா படத்தை வெளியிட்டிருந்தாராம். தற்போது அமெரிக்காவில் உயர்கல்வி படித்து வரும் நர்மதா, இதுகுறித்து மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மகாலெட்சுமி கிருணகுமாரிடம் கேடடதற்கு அவர் கொலை செய்து விடுவ தாக மிரட்டினாராம். மகாலெட்சுமி புகார்படி கிருஷ்ணகுமாரை விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com