ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விசலூரில் கிபி 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு

News image
Updated On :14 நவம்பர் 2016, 1:23 pm

சி. உதயகுமார்

அன்னவாசல் அருகேயுள்ள விசலூரில் கிபி 10 - ம் நூற்றாண்டை சேர்ந்த 10 - கற்சிற்பங்கள் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் பெரிய குளத்தில் கருவைகள் சூழ்ந்த முற்புதருக்குள் கற்சிற்பங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலையடுத்து அச்சிலைகளை புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாட்சியரிடம்(பணியாளர்) ஒப்படைக்கும் படி இலுப்பூர் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து, வருவாய்துறை மற்றும் அருங்காட்சியத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சிலைகளை எடுக்க முற்பட்டனர். இதையறிந்த ஊர் பொதுமக்கள் சிலையை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சிலைகளை தெய்வமாக போற்றி வணங்கி வருவதாகவும் இதனால் இங்கேயே சிலைகளை வைத்து பராமரிக்க வற்புறுத்தினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கே. தமிழ்மணி, அன்னவாசல் காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பாக சிற்பங்களை எடுத்து புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார்.  

சிலைகளின் விபரங்கள்:- 1 - சேஷ்டா தேவி - அமர்ந்த நிலையிலும் 2 - தெட்சிணா மூர்த்தி - அமர்ந்த நிலையிலும் 3 - பிரம்மா - அமர்ந்த நிலையிலும் 4 - நரசிம்மா - அமர்ந்த நிலையிலும் 5 - துவார பாலகர் - அமர்ந்த நிலையிலும் 6 - சாண்டிகேஸ்வர - அமர்ந்த நிலையிலும் 7 - இந்திரன் - அமர்ந்த நிலையிலும் 8 - நந்தி சிலைகள் 3. என 10 - கற்சிற்பங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்டன பின்பு இவை அனைத்தும் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அருங்காட்சியத்திற்கு கொண்டுசென்று மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

மேற்கண்ட கற்சிற்பங்களில் காணப்படும் கலை நுணுக்கங்களையும் வேலைபாடுகளையும் ஆராயும் போது இவைகள் கிபி - 10 ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் எனவும் இதை அருங்காட்சியத்தில் வைத்து காட்சிபடுத்தினால் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் என அருங்காட்சியத்தினர் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.