ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ராஜாளிபட்டியில் நிலுவைத் தொகையை தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் 3 மாத நிலுவைத் தொகையை தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 நவம்பர் 2016, 1:13 pm

சி. உதயகுமார்

விராலிமலை

விராலிமலை அருகே ராஜாளிபட்டியில் 3 மாத நிலுவைத் தொகையை தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள ராஜாளிப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில், பாப்பாபட்டி, பகவான்பட்டி, பாட்னாபட்டி என சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், ஒவ்வொரு பால் உற்பத்தியாளர்களுக்கும் சுமார் 3 முதல் 4 மாதம் வரை பால் கொள்முதல் தொகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 25 பால் உற்பத்தியாளர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு கணக்கு பராமரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பால்பெருக்குத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது,

ரூ,500, ரூ,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணப்புழக்கத்தில் பெரிதும் பின்னடைவு அடைந்துள்ள இவ்வேளையில் உற்பத்தியாளர்களின் பால் கொள்முதல் நிறுத்தம், பணப்பட்டுவாடா நிலுவை, போனஸ் இல்லை என அடுக்கடுக்கான இன்னல்களால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், தனியார் கொள்முதல் நிலையங்களை உற்பத்தியாளர்கள் நாடிச்செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை பால்பெருக்குத்துறை முதுநிலை ஆய்வாளர் முரளி விசாரணை மேற்கொள்ள ராஜாளிபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வந்தபோது அவரையும், சங்க செயலாளர் சுப்ரமணியையும்  உற்பத்தியாளர்கள் சூழ்ந்து  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், ஆய்வாளர் முரளி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விரைவில் உரிய தொகைகள் அவரவருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மணப்பாறை- விராலிமலை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.