தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாட்டின் எல்லைப் பகுதியில் அதிக கவனமும், முதலீடும் தேவை: ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா பேச்சு

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில்  தில்லியில் இன்று ‘உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பகுதி மேலாண்மை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு  நடைபெற்றது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 2:22 pm

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில்  தில்லியில் இன்று ‘உள்நாட்டு பாதுகாப்பு, எல்லைப் பகுதி மேலாண்மை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு  நடைபெற்றது. 
இதில் ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் எல்லைப் பகுதியில் அதிக கவனமும், முதலீடும் தேவை என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசும் போது நான் வேலை செய்கின்ற காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டு முழுவதும் ஊடுருவல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. 
உயரமான மற்றும் பனி சூழ்ந்த மலைகள் வழியாகவும் விமானங்கள், ஆற்றுப் படுகைகள் மூலமாகவும் ஊடுருவல் அரங்கேறுகின்றது. வருடம் முழுவதும் ஊடுருவல், மறைமுக போர் நடைபெறும் ஜம்மு- காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு எல்லை மேலாண்மை மிகவும் தேவையாக உள்ளது. 
சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தீவிரவாதிகளை சமாளிக்க சிறப்புப் படைகள் தேவைப்படுகின்றது. என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.