
சசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மலேசிய நண்பன் என்ற மலேசிய தமிழ் நாளேட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த 17-12-16 அன்று அந்த நாளிதழ் வெளியானதாக தெரிகிறது அதில் கால்கள் இல்லாது என்னால் வாழ முடியாது... என்னை கருணை கொலை செய்துவிடு சசி... என்று ஜெயலலிதா கதறியதாக கேள்வி குறியுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தாங்கிய அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ச்சியில் உறைந்திருக்கும் தமிழக மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி என்றே கூறவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





