மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் இந்தியா உடனான உறவை கடுமையாக பாதித்துள்ளது: சீனா

தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் இந்தியா உடனான உறவை கடுமையாக பாதித்துள்ளது என்று  சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 10:27 am

DIN

பெய்ஜிங்: தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் இந்தியா உடனான உறவை கடுமையாக பாதித்துள்ளது என்று  சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுங்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் தலாய் லாமா பயணம் மேற்கொள்வது குறித்து சீனா தெரிவித்த கவலையை இந்தியா அவமதித்து விட்டது.

இது இந்தியாவுடன் சீனா பாராட்டி வரும் சீரிய உறவை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இதனை இந்திய பிரதிநிதிகளிடம் தெரிவிப்போம்” என்றார். இதனையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி விஜய் கோகலேவிடம் தலாய்லாமா பயணம் குறித்து சீனா தனது கவலையை தெரிவித்ததாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக 9 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள தலாய்லாமா நேற்று அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமிங் மாவட்டத்தில் உள்ள மோம்டிலா பகுதிக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, பயணத்தை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.