ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரை வீணாக்கினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: பருவமழைப் பொய்த்துப் போனதால் இந்த ஆண்டு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. எனவே, மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களிலும் குடிநீóர் பற்றாக்குறை ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளைக் கண்டறிந்து குறைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மோட்டார் பழுதுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதி மற்றும் பொது நிதியில் இருந்து 246 குடிநீர்ப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குடிநீரை வீணாக்குவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்த் திட்டக் குழாய்களை சேதப்படுத்துவோர் மற்றும் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது சொத்துகளை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படுவார்கள் என்றார் அன்பழகன்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் விமலாதேவி, நகராட்சி ஆணையர் (பொ) குணாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

