ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜல்லிகட்டு போட்டி: மேலும் ஒருவர் உயிரிழப்பு

விராலிமலை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

News image
Updated On :23 ஜனவரி 2017, 2:08 pm

சி. உதயகுமார்

விராலிமலை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

விராலிமலை அருகேயுள்ள ராப்பூசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது, இதில் அப்பகுதியைச் சேர்ந்த 168 காளைகள் பங்கேற்று துள்ளி குதித்து ஓடியது.

இதில் காளைகளை அடக்க முயன்ற ஒடுக்குர் ராஜா மற்றும் லட்சுமணப்பட்டி மோகன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து ஏற்கனவே உயிரிழந்த நிலையில், திருச்சி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாங்குடியைச் சேர்ந்த க. கருப்பையா(30) சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.இதனால் ஜல்லிக்கட்டு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.