மனசாட்சியின்படி வாக்களிக்குமாறு எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்: மீராகுமார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் மனசாட்சியின்படி வாக்களுக்குமாறு அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்
மனசாட்சியின்படி வாக்களிக்குமாறு எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்: மீராகுமார்
Updated on
1 min read

புதுச்சேரி:  குடியரசுத் தலைவர் தேர்தலில் மனசாட்சியின்படி வாக்களுக்குமாறு அனைத்து எம்.பிக்கள், எம்.எல்.ஏகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கோரிய பின் குடியரசு தலைவர் வேட்பாளர் மீராகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது

புதுச்சேரி மிகவும் அமைதியான மாநிலமாக உள்ளது. இது ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் அனைவருக்கும் ஜாதி மத பாகுபாடின்றி, மரியாதை தரும் இடமாக உள்ளது அரவிந்தர், அன்னை போன்றோரின் ஆன்மீக சிந்தனைகளை பின்பற்றும் இடமாக உள்ளது.

17 பெரிய கட்சிகள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் என்னை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்தது மிகப்பெரிய வரலாற்று முடிவாகும். இதை ஒரு சிறந்த கவுரவமாக நான் கருதுகிறேன்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் நான் சமர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து பிரச்சாரத்தை துவக்கினேன்.  சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினேன். அதன் தொடர்ச்சியாக இப்போது புதுவையில் காங்கிரஸ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்துள்ளேன்.

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து எம்.பிக்கள் எம்.எல்.ஏ. கள், ஆகியோருக்கு மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என கடிதம் எழுதியுள்ளேன். ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும், மத சார்பின்மை, மற்றும் கருத்து சுதந்திரத்திற்காகவும் எனக்கு வாக்களிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கும் , எனக்கும் இடையிலான மோதல் கொள்ளை ரீதியான போராட்டமாக கருதுகிறேன். நாங்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பிரிவு மக்களுக்கு குரல் தரும் அணியாக உள்ளோம்.

நாடு இப்போது உள்ள சவாலான சூழ்நிலையில், எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இத்தேர்தலில் வலுவான போட்டியை நான் உருவாக்கியுள்ளேன் என்றார் மீராகுமார்.

முதல்வர் நாராயணசாமி, மேலிட பொறுப்பாளர்கள் பவன்குமார் பன்சால், சின்னாரெட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com