திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இடி தாக்கியதில் பெண், சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
திருமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ் (45). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களுடன் செங்கப்படை காட்டில் விறகு வெட்டிவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது, இடி மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட சங்கர்ராஜை நண்பர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், சங்கர்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கள்ளிக்குடி அருகே உள்ள அகத்தாபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சுபாஷ் (8). சென்னையில் பெற்றோருடன் தங்கியிருந்த இவர், கோடை விடுமுறைக்கு கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது, அப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் ஏற்பட்டது. அப்போது, மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த சுபாஷ் உயிரிழந்தார்.
கரிசல் காளான்பட்டியைச் சேர்ந்த சூராயி (40). ஆடு மேய்க்கச் சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து திருமங்கலம் தாலூகா மற்றும் கள்ளிக்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

