2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இரட்டை இலை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் டிசம்பர் 5-க்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 5-ம் தேதிக்குள்..

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:59 am

DIN

இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 5 க்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தில்லி போலீசாருக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக விசாரித்து வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக அதிமுக அம்மா கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தில்லி போலீசார்  வழக்குப் பதிவு செய்தனர். 

இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா தரப்பினர் ரகசிய பேரத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவலை அடுத்து தில்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்தின் பேரில் சுகேஷ் சந்திர சேகரராவ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த அவரிடம் ரொக்கமாக ரூ.30 லட்சம் இருந்தது. அந்த பணம் பற்றி கேட்டபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது புத்தம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கத்தை கத்தையாக சிக்கின. அதில் ரூ.1 கோடி இருந்தது. அந்த பணத்துக்கும் அவரால் சரியான விளக்கம் அளிக்க இயலவில்லை.

போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்திருப்பதாக கூறினார். இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அப்போதுதான் அவர் இடைத்தரகர் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அ.தி.மு.க. அம்மா அணியினரிடம் தனக்கு தேர்தல் கமி‌ஷனில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தெரியும் என்றும் இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றும் கூறி அவர் கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்திருப்பதாக தெரிய வந்தது. போலீசாரிடம் அவர் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் பெயரை குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.1.30 கோடியை தில்லி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள். அவருக்கு சொந்தமான ஒரு பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்ஸ்சிடஸ் பென்ஸ் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிறகு அவரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தில்லி குற்றப் பிரிவு போலீசார் தினகரன் இரட்டை இலையை மீட்பதற்கு இடைத் தரகர்கள் மூலம் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் டிசம்பர் 5 க்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தில்லி போலீசாருக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.