வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கைதாகிறார் செந்தில் பாலாஜி?: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைவு

செந்தில் பாலாஜி 2015-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 9:26 am

DIN

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவும் டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜியை பண மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி 2015-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.25 கோடியை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில் பாலாஜியிடம் விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விரைந்துள்ளனர்.

தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜியை குடகில் வைத்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் தினகரன் ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி குடகு பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.