பயங்கரவாத கருத்துகளை வெளியிட்ட 10 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.


பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பவர்களின் கணக்குகளை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் டுவிட்டர் நிறுவனம் முடக்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 460 கணக்குகளை டுவிட்டர் முடக்கியுள்ளது. முந்தைய புள்ளிவிவர அறிக்கையின்படி இது 8.4 சதவீதமாக குறைந்துள்ளது.
டுவிட்டரில் பயங்கரவாதிகள் வன்முறைத் தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும்போது உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நேரத்திலும், நல்ல கருத்துக்கள் பரிமாற்றத்திற்காக இலவச திறந்த தளம் பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆறு மாதத்தில் 93 சதவீத டுவிட்டர் கணக்குள் முடக்கப்பட்டது. இதில் 74 சதவீதத்தினர் தங்களின் முதல் டுவிட்டிற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.
வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிட்டதாலும் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...