தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

ஏ.டி.எம்.களில். பணப்புழக்கம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது: பாரத ஸ்டேட் வங்கி 

ஏ.டி.எம்.களில். பணப்புழக்கம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 4:24 pm IST

ஏ.டி.எம்.களில். பணப்புழக்கம் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 

ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்) பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஏடிஎம் வாசல்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தப் பிரச்னை குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார் கூறுகையில், 'விவசாய விளை பொருள்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும் காலம் இது. எனவே, கரன்சி நோட்டுகளுக்கான தேவை அதிகம் உள்ளது' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரங்களில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இல் பணப் பரிவர்த்தனை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் இந்த சிக்கல் முடிவுக்குவந்து இயல்பு நிலை ஏற்படும் என்று எஸ்.பி.ஐ. தலைமை இயக்க அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்த்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி தொடர்ந்து நிலைமையை கண்காணித்து, ஏடிஎம்களில் ஏராளமான பணத்தை வழங்குவதற்கு மகத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில்  92% பணப்புழக்கம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.