நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது: துணை முதல்வர் ஓபிஎஸ்

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


மதுரை: சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர். 

சாமி தரிசனத்திற்கு பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கமலின் கருத்து அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றார்.

அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கூறிய கருத்து பதிலளிக்கையில், அதிமுகவில் விரிசல் என்ற திருநாவுக்கரசர் கூறுவது பகல் கனவு, திருநாவுக்கரசரின் பகல் கனவுக்கு யாரும் விடை சொல்ல முடியாது. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம் என்றார். 

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து முதல்வர் முடிவு செய்வார். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைப்போம் என்றும் இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார். 

மேலும், சசிகலா குடும்பத்திற்கு எதிராக மிகப்பெரிய தர்மயுத்தம் நடத்தி அதிமுக வெற்றி பெற்று தொண்டர்களுடைய ஆதரவுடன் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று ஒரு குடும்பத்தில் இருந்து காப்பாற்றிய கட்சியை மீண்டும் அந்த குடும்பத்திடமே ஒப்படைக்க தயாரில்லை. தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைவதற்கோ, இணைப்பதற்கோ வாய்ப்பு இல்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.