வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

செவிலியர் தற்கொலைக்கு நீதி கேட்டும் மருத்துவர்களைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் 

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் தற்கொலை விவகாரத்தில், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மீது வழக்குப்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:27 am

DIN

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர் தற்கொலை விவகாரத்தில், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, காங்கயத்தில் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் விடிய விடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் மணிமாலா (26). இவர் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

இதை அறிந்ததும் காங்கயம், தாராபுரம் திருப்பூர், வெள்ளக்கோவில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் காங்கயம் அரசு மருத்துவமனை முன்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மணிமாலாவை தற்கொலை செய்யத் தூண்டியதாக மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அதிகாரப் போட்டியே காரணமென குற்றம்சாட்டிய தமிழக செவிலியர் சங்கத்தினர், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும், உடலை வாங்காமல் உறவினர்கள் செவிலியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் விடிட விடிய தொடரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தற்கொலைக்கு காரணமான இருவரையும் கைது செய்தால் மட்டுமே செவிலியர் மணிமாலாவின் உடலை வாங்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் பிரச்னை தொடர்பாக காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை ஆட்சியர் லியாகத் (பொறுப்பு), காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேல், டிஎஸ்பி. கிருஷ்ணசாமி, காங்கயம்- வெள்ளக்கோவில் போலீஸார், திருப்பூர் மாவட்ட மாதர் சங்க நிர்வாகி, மாவட்ட செவிலியர் சங்கம், மருத்துவப் பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டபடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.