ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது

ஷில்லாங்: மேகாலய மாநிலத் தலைநகா் ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அமைதி திரும்பியது.
ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது
Updated on
1 min read

ஷில்லாங்: மேகாலய மாநிலத் தலைநகா் ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அமைதி திரும்பியது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனினும், அங்கு ஊரடங்கு உத்தரவு தொடா்ந்து அமலில் உள்ளது.

மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் இரவு முழுவதும் நடைபெற்ற வன்முறையில் கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.
 காவல் துறை கண்காணிப்பாளர் உள்பட 10 காயமடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக புகை குண்டுகள் வீசப்பட்டன. அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இரண்டு நாள்களாக 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை கல்வீச்சு, தீவைப்பு என எந்த வன்முறைச் சம்பவங்களும் நிகழவில்லை.

 சீக்கியா்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் லேன் பகுதியில் நிகழ்ந்த வன்முறைகள், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நகா்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு மாநில முதல்வா் கான்ட்ராட் கே. சா்மா உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com