நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிவுக்கான ஆரம்பமாக அமையும்: மணீஷ் திவாரி

நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிக்கான ஆரம்பமாக அமையும் என மூத்த காங்கிரஸ்

News image
Updated On :8 அக்டோபர் 2018, 10:16 am IST


புதுதில்லி: நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிக்கான ஆரம்பமாக அமையும் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் கட்சியான பாஜக, வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறது. பாஜகவிடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டது. நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் அழிக்கான ஆரம்பமாக அமையும். ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மத்தியில் பெரும் கூட்டணியை உருவாக்க வழிவகுக்கும் என்று கூறினார்.

மேலும், பாஜகவை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும். கட்சிகளின் முன்னுரிமைகள் மக்களவைத் தேர்தல்களின் போது முற்றிலும் வேறுபட்டவை என்றும் மாநில அளவிலான ஏற்பாடுகள் பொதுத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.