பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டணம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
கர்நாடகாவில் பேருந்துகள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று தென்காசி, கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவில், சம்பல்பூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா, ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து டிப்போ முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் இணைந்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வைச் சந்தித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 83.91 ஆகவும், டீசல் 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 76.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 23 மற்றும் 22 பைசா உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 88.12 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.77.32 ஆகவும் அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையாகி வருகிறது. டீசல் விலை உயர்வைக் காரணமாக்கி அடுத்தகட்டமாக அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏற்றப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


