
நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்டப்பேரவை அதிகாரத்தை நாடாளுமன்றம் கையில் எடுத்துள்ளது.
காஷ்மீரைப் போல மற்ற மாநிலங்களும் பிரிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்த சிதம்பரம், நாட்டு மக்கள் பாஜக அரசின் ஆபத்தான செயல்கள் குறித்து விழித்தெழ வேண்டும் என்றார்.
மேலும், நரேந்திர மோடி அரசு தொடர்ந்தால் நாடு சிதறுண்டு போகும் என்று சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.