தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம்

News image
Updated On :3 டிசம்பர் 2019, 2:30 am

DIN


கனமழை காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்றும் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (டிச.3,4) மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழைக் காலங்களில் மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில்,  தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் தவிர்த்து, கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஏதேனும் ஒரு வார விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.