தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கன மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள்

News image
கோப்புப் படம்
Updated On :28 நவம்பர் 2019, 2:56 am

DIN


கன மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருவம் நிலையில்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தொடர் மழை காரணமாக,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். 

மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.