நிலவைச் சுற்றி வரும் லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைப்பு: இஸ்ரோ அறிவிப்பு
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து


நிலவைச் சுற்றி வரும் லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. ஆறு நாள்கள் பயணத்துக்குப் பின்னர், விண்கலம் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் நுழைந்தது.
அதன் பின்னர் விண்கலம், நிலவுக்கு இடையேயான நீள்வட்டப் பாதையின் தொலைவை படிப்படியாக 5 முறை குறைத்து, நிலவுக்கு மிக அருகில் விண்கலத்தை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் கொண்டு சென்றனர்.
விஞ்ஞானிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி மேற்கொண்ட கடைசிக் கட்ட நீள்வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கை மூலம், நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 127 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் வகையில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆர்பிட்டர் - லேண்டர் பிரிப்பு நிகழ்வை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி, நேற்று திங்கள்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு விண்கலத்தைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் பிரித்து சாதனை படைத்தனர்.
இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை காலை லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் 109 கி.மீ அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நாளை 36 கி.மீ அருகில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை நிலவில் தரையிறங்கும் பணிகள் தொடங்கும். அப்போது, லேண்டரில் உள்ள லேசர் தொழில்நுட்பம் மூலம் நிலவில் தரையிறங்குவதற்கான சமதளப் பரப்பை தேர்வு செய்து, அடுத்த 15-ஆவது நிமிடத்தில் அதாவது அதிகாலை 1.55 மணியளவில் லேண்டர் விக்ரம் மெதுவாகத் தரைஇறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரின் பேலோட் எனப்படும் இன்ஜின்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...