பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 மே 2019, 12:44 pm

DIN


புதுதில்லி: தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த 17-வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைக்க பிரதமர் உரிமை கோருவது மற்றும் பதவி பிரமாணம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. 

இந்நிலையில், தில்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி மக்களவைக் குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.