எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ பறிமுதல்: கர்ப்பிணிப் பெண் போராட்டம்

தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 10:06 am

DIN


போடி: தேனி மாவட்டம் போடியில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆட்டோவை விடுவிக்க கோரி கர்ப்பிணி பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்  கார்த்திகா என்ற கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சென்ற போடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆட்டோவில் சென்ற போது ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர்  சதீஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கர்ப்பிணிப் பெண் என்று பாராமல் அவரை இறக்கி விட்டனர். 

ஆட்டோவையும், ஆட்டோ ஓட்டுநரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் நடைபயணமாக போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற கார்த்திகா, தான் வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ததை அறிந்து நடந்தே போடி நகர் காவல் நிலையத்திற்கு வந்து நின்று ஆட்டோவை விடுவிக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தேனி எஸ்.பி. சாய் சரன் தேஜஸ்வி கூறுகையில்,  மேற்படி ஆட்டோ ஓட்டுநர் கர்ப்பிணியை இறக்கிவிட்டு காத்திருக்காமல் சுற்றியதால் பறிமுதல் செய்தோம். மேலும் பொதுமக்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அல்லது காவல்துறை உதவியை நாடினால் உரிய  நடவடிக்கை எடுப்போம். ஆட்டோவை அனுமதித்தால் அனைத்து ஆட்டோநர்களும் இப்படி கிளம்பி விடுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.