எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஊரடங்கை நீட்டித்தால் பொருளாதாரம் சீரழிந்துவிடும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்தால் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என எச்சரித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 7:10 am

DIN



புது தில்லி: ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்தால் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என எச்சரித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்காமல் பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவதற்கான வழியை இந்தியா புத்திசாலித்தனமாக தேட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி காணொலி வாயிலாக பொருளாதார பாதிப்பு குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் பேசயுள்ளார், இதில் முதல்கட்டமாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பொருளாதார பாதிப்பு குறித்து கணொலி வாயிலாக ஆலோசித்தார். 

அப்போது ரகுராம் ராஜன் கூறியதாவது:  தற்போதைய சூழ்நிலையில் ஏழைகளுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற ராகுலின் கேள்விக்கு பதிலளிக்கையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க உடனடியாக இந்தியாவுக்கு ரூ.65,000 கோடி தேவைப்படும் என்றும், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ.200 லட்சம் கோடி. இதில் ரூ.65,000 கோடிதான் ஏழைக்களுக்கு ஒதுக்கப்போகிறோம். இது பெரிய தொகை அல்ல. உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அதைச் செய்ய முடியும் என்றும் கூறினார். 

மேலும், என்னைப் பொறுத்தவரை 3-வது அல்லது 4-வது ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். எனவே, சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்துவிடப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். 

நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கரோனா தொற்று பாதித்தவர்களின் வருகை இருக்கத்தான் செய்யும், அவர்களை நாம் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து பொருளாதாரத்தை இயக்க வேண்டும். 

இந்திய அரசு அரசு வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். இந்தியா தனது உற்பத்திக்கும், விற்பனைக்கும் சர்வதேசயளவில் நல்ல சந்தை இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது. அதனால் உலகளவில் ஆர்டர்களை எடுக்க இந்தியாவால் நிச்சயம் முடியும் என்று ராகுராம் ராஜன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.