/

கரோனாவால் பாதிக்கப்பட்ட சித்தராமையாவின் உடல்நிலை சீராகி வருகிறது

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
Updated On :5 ஆகஸ்ட் 2020, 9:12 am

DIN

பெங்களூரு: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 4-ஆம் தேதி கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை காய்ச்சல் காரணமாக மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனிடையே இன்று மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது அவருக்கு (சித்தராமையா) காய்ச்சல் குறைந்துள்ளது. காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை எங்கள் மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.