/

நாட்டில் 2-வது நாளாக 6 லட்சத்திற்கும் அதிகமான கரோனா பரிசோதனை

நாட்டில் தொடர்ந்து 2-வது நாளாக 6 லட்சத்திற்கும் அதிகமான கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
ராஜஸ்தானில் புதிதாக 593 பேருக்கு கரோனா தொற்று: 10 பேர் பலி
Updated On :5 ஆகஸ்ட் 2020, 1:10 pm

DIN

புதுதில்லி: நாட்டில் தொடர்ந்து 2-வது நாளாக 6 லட்சத்திற்கும் அதிகமான கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை சார்பில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் 6,19,652 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,14,84,402-ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று (செவ்வாய்க் கிழமை) மட்டும் 6,61,715 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  920 அரசு மையங்களிலும், 446 தனியார் மையங்களிலும் என மொத்தம் 1,366 மையங்களில் கரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பரிசோதனைகள் அதிகரிப்பதால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.