அருணாச்சல பிரதேசத்தில் 68 கரோனா முன்கள வீரர்களுக்கு தொற்று
அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 68 முன்கள வீரர்கள் உட்பட 93 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 68 முன்கள வீரர்கள் உட்பட 93 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அருணாச்சல பிரதேச சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை தொற்றால் 1,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 700 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1,245 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்தனர்.
மொத்த தொற்று பாதிப்பில் நம்சாய் மாவட்டம் (55), லோஹித் (10), கிழக்கு காமெங் (8), மூலதன வளாகம் மற்றும் தவாங் தலா ஆறு, சாங்லாங் மற்றும் லோயர் சியாங் மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு பேருக்கு பாதிப்பு. மேற்கு காமெங், டிராப், பாம்புரே மற்றும் மேற்கு சியாங்கில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 68 முன்கள வீரர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்சாய் மாவட்டம் (54), லோயர் (10), தவாங் பகுதியில் எஞ்சிய பாதிப்பு பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...