மழையால் எர்ணாகுளத்திற்கு ரூ. 1.22 கோடி இழப்பு
எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் ரூ. 1.22 கோடி மதிப்பிலான வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.


எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் ரூ. 1.22 கோடி மதிப்பிலான வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.
இது குறித்து எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கையில்,
எர்ணாக்குளத்தில் பெய்து வரும் கனமழையால் கடலோர கிராமங்களான செல்லனம் போன்ற பகுதிகளில் அதிகளவிலான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது.
கொச்சி தாலுக்கா மற்றும் கனயனூர் தாலுக்காவில் 60 லட்சம் மதிப்பிலான வீடு, நிலங்கள் சேதமடைந்துள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் 30 நிவாரண முகாம்களில் 97 குழந்தைகள் உள்பட 852 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எட்டு சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது என கூறினர்.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...