ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அசாம் : 72 மணிநேரத்தில் திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை

அசாமிற்கு வரும் விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் திரும்புவோராக இருந்தால் தனிமைப்படுத்தல் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:45 am

PTI

அசாமிற்கு வரும் விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் திரும்புவோராக இருந்தால் தனிமைப்படுத்தல் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் சமிர் சின்ஹா கூறுகையில்,

அசாமிற்கு பணி நிமிர்தமாக வந்து உடனே திரும்பிச் செல்லும் பயணிகளுக்கு இனி தனிமைப்படுத்தல் கிடையாது. அவ்வாறு வருபவர்கள் திரும்ப செல்லும் பயணச்சீட்டைக் காட்ட வேண்டும்.

மேலும் அவர்களுக்கு ரேபிட் பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லையென்றால் உடனே செல்லலாம். தொற்று உறுதியானல் கரோனா நோயாளிகளுக்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு அறிகுறி இருப்பின் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும்.

தவறான தகவல் கொடுத்து 72 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அந்த பயணி மீது நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.