ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பஞ்சாபில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

பஞ்சாப் மாநில அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை வழங்கியது.

News image

பஞ்சாபில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 12:44 pm

PTI

பஞ்சாப் மாநில அரசு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை வழங்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர்.

96 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தை’ முதல்வர் அமரீந்தர் சிங் காணொளி மூலம் தொடாங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் போன்களை விநியோகித்தனர்.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து முதல்வர் பேசுகையில்,

முதல் கட்டமாக இத்திட்டத்தின் மூலம் நவம்பர் மாதத்திற்குள் அரசுப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1,74,015 பேர், பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்த 94,832 இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 36,555 இளைஞர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள் மாணவர்களின் கல்விக்கு ஒரு முக்கிய கருவியாக மாறும் என்று முதல்வர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.