மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர், துணை முதல்வருடன் அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 9:26 am

DIN


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவில் நடைபெற்ற குழப்பங்களை நாடே அறிந்தது.  இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என அக்கட்சியில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவின் முதல்வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்வோம் என்று கூறியதே தற்போதைய விவகாரத்திற்கு பிள்ளையார் சுழியானது.

அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களான ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் என ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் கூடி பேசிய கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையெல்லாம் அறிவிப்போம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். இருப்பினும் அதிமுகவின் ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கருத்துத் தெரிவித்ததை அடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. 

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர் என மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 2021 இல் தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மகன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்,சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களான ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், சிவி சண்முகம், கேசி.வீரமணி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். 

முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். 

இதனிடையே தேனி மாவட்டம் முழுவதும் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் பழனிசாமியை சந்தித்த மூத்த அமைச்சர்கள், அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கலாம் எனவும் அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.