அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமிப்பு:விவசாயிகள் பாதிப்பு
அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயுடன் கஞ்சநாயக்கன்பட்டி கண்மாய் இணையும் பகுதியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமைரைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயுடன் கஞ்சநாயக்கன்பட்டி கண்மாய் இணையும் பகுதியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் விவசாயத்திற்குப் பயன்பட வேண்டிய நீரை உறிஞ்சிவிடுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் பெரியகண்மாயின் கிழக்குப்பகுதியுடன், அருகிலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கண்மாயும் இணைகிறது. கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து சில நாட்கள் இடைவெளியில் ஐந்துமுறை கனமழை பெய்தது.
இதில் கண்மாய்க்கு வரவேண்டிய நீர்வரத்தானது வரத்துக் கால்வாய் முறையாகத் தூர்வாறப்படாததால் தேவைக்கும் குறைவான நீரே கண்மாய்க்கு வந்தது. இந்நிலையில் இவ்விதம் குறைவாக வந்த நீரையும் அங்கு ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் உறிஞ்சிவிடுவதாகவும் இதனால் கண்மாய் நீரை நம்பி இப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட அருப்புக்கோட்டை, இராமசாமிபுரம் மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோடைகாலத்தில் கண்மாய் வற்றிய போது காய்ந்துபோன ஆகாயத் தாமரைகளை எளிதில் அகற்ற முடியுமென்பதால் அப்போதே அகற்றிட மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே தற்போது ஆகாயத் தாமரைகள் பெருகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகள் நலன் கருதி விரைவில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென மீண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...