மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோச வழிபாடு

அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

News image
பாறைக்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் முழுஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மேற்குத்திசை நோக்கிய அருள்மிகு வெள்ளியம்பலநாதர்
Updated On :30 ஆகஸ்ட் 2020, 2:24 pm

DIN

அருப்புக்கோட்டை: அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றானதும், அபூர்வமாக மேற்குத்திசை நோக்கி அமைந்த சிறப்புப் பெற்றது இத்திருக்கோவில்.

மேலும், திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோவிலும் இதுவாகும். இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆவணி மாத சிறப்புப் பிரதோச வழிபாட்டில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் முதலில் நடைபெற்றன.

பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு சந்தனம், இளநீர், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும்  நடைபெற்றன.

மேலும் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்ராட்ச அபிúஸகம் செய்து, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயர் காட்சி தந்தார். அதனையடுத்து முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் காட்சியளித்தார்.

முழுஊரடங்கு காரணமாக  இந்நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் பிரதோச வழிபாட்டு தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான  ராஜபாண்டி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.