சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு தினசரி 1,000 பக்தா்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தா்களுக்கும் மட்டுமே வழிபாடு செய்ய அனுமதி அளித்து வந்தது.
இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, தினசரி 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறுகளில் 4,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தேவசம் போர்டு அளித்த பரிந்துரைக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், டிசம்பர் 2ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


