

புயலின் தாக்கத்தை எதிர் கொள்வதற்காக தமிழகம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, 1.12.2020 முதல் 4.12.2020 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும் மற்றும் கேரளத்திலும் புயலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புயலின் தாக்கத்தை எதிர் கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையின் 18 குழுக்கள் தமிழகத்திலும், 8 குழுக்கள் கேரளத்திலும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.