புரெவி புயல்: தமிழக முதல்வருடன் மோடி பேச்சு
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.


புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
இதற்குபின், மோடி வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
“புரெவி புயலை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களுடன் கேட்டறிந்தேன்.
இரு மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மேலும் புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் இருக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...