தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புயல் எதிரொலி: தூத்துக்குடி செல்லும் 2 ரயில்கள் மதுரையுடன் நிறுத்தம்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி செல்லும் 2 ரயில்கள் மதுரையுடன் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 டிசம்பர் 2020, 12:48 pm

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி செல்லும் 2 ரயில்கள் மதுரையுடன் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையிலிருந்து நாளை தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும், மேலும் நாளை தூத்துக்குடிக்கு பதிலாக மதுரையிலிருந்து கிளம்பும்.

அதேபோல் மைசூர் விரைவு ரயிலும் நாளை மதுரையுடன் நிறுத்தப்படும், மேலும் தூத்துக்குடிக்கு பதிலாக மதுரையிலிருந்து கிளம்பும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.