தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆடி அமாவாசை: நைவேத்தியம் செய்து முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பசு மாடுகளுக்கு அரிசி காய்கறிகளை வைத்து நைவேத்தியம் செய்து முன்னோர் வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 ஜூலை 2020, 6:24 am

DIN

ஆடி அமாவாசையை முன்னிட்டு பசு மாடுகளுக்கு அரிசி காய்கறிகளை வைத்து நைவேத்தியம் செய்து முன்னோர் வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இந்து தர்ம வழக்கப்படி முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை ,தை அமாவாசை ஆகிய நாட்களில் கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி பித்ருக்களுக்கு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நிகழாண்டு பொதுமுடக்கம் காரணமாக ராமேஸ்வரம், கோடியக்கரை, காமேஸ்வரம், பூம்புகார்மற்றும் திருவாரூர் கமலாலய குளக்கரை திருவையாறு, திருச்சி அம்மா மண்டபம், ஈரோடு பவானி கூடுதுறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கூடி பித்ரு வழிபாடு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன் பொதுமக்கள் ஆலயங்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பசு மாடுகளுக்கு அரிசி அகத்திக்கீரை கொத்தவரங்காய் வாழைக்காய், வெல்லம், எள் ஆகியவைகளை பசு மாடுகளை குளிப்பாட்டி சந்தனம் குங்கும பொட்டு வைத்து நைவேத்யம் செய்து பசு மாடுகளின் கால்களில் விழுந்து வழிபட்டனர். இதுகுறித்து கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர்கோ. காசிநாதன் கூறுகையில் தனது வாழ்நாளில் இதுபோன்ற கடற்கரையிலோ ஆறுகளில் புனித நீராடுவது தடைசெய்யப்பட்டு பித்ரு தர்ப்பணம் செய்வது தடை பட்டதே கிடையாது. 

நிகழாண்டுதின் இதுபோல நடந்துள்ளதாகவும் எல்லாமீ கலிகாலம் என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.