3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மருங்காபுரி அருகே உணவகத்தில் தீ விபத்து

மருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த தேநீர் கடையும் நாசமடைந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

News image
மருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து
Updated On :23 ஜூலை 2020, 9:42 am

DIN

மருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த தேநீர் கடையும் நாசமடைந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த ஊத்துக்குளி கிராமத்தில் நள்ளிரவு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உறங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள் எழுந்து பார்த்தபோது வடக்கு தெருவில் உள்ள நாகராஜ் என்பவரின் உணவகம் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் இருந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையும் தீ விபத்துக்குள்ளானது.

இதனைக்கண்ட கிராம மக்கள் அருகில் உள்ள இலுப்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கடை ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் உணவகத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளை, அடுப்பில் இருந்த தீகனுக்களால் தீப்பற்றி வெடித்தது தெரியவந்தது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் சுப்பிரமணி என்பவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்து குறித்து வளநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.