உ.பி அரசு கரோனா பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும்: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரப் பிரதேச அரசிடம் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் பரிசோதனை அதிகரிப்பு..


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரப் பிரதேச அரசிடம் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் பரிசோதனை அதிகரிப்பு மற்றும் சுகாதாரத்தில் மாநில அரசு சரியான கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதுக்குறித்து அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கைகளாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது,
“நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு கரோனா பரிசோதனை அதிகரிப்பு, மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் கரோனா மையங்களில் உள்ள தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
நேற்று ஒரே நாளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று 2,667 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வந்த 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...