மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருக்குவளை: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருக்குவளையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருக்குவளை: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Updated On :28 ஜூலை 2020, 11:07 am

DIN

திருக்குவளையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கரோனா நோய் தொற்று காலம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 7500 நிவாரணம் வழங்க  கோரியும், நுண் நிதி நிறுவனக் கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்திடவும் கூட்டுறவு மற்றும்  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் மற்றும் 60 வயது நிறைவடைந்த முதியோர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.வேணு, கீழையூர் ஒன்றியத் தலைவர் ஏ.முருகையன், கீழையூர் ஒன்றிய பொருளாளர் தெஷ்ணாமூர்த்தி, தலைஞாயிறு ஒன்றிய துணை செயலாளர் ஜி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஐஎம் மாவட்டச் செயலாளருமான நாகை மாலி  பங்கேற்று கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். உடன் இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.முருகையன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.லதா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே.கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரோனோ பரிசோதனையை வீடு வீடாக நடத்திடவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் உணவின் அளவை உயர்த்தி தினக்கூலியை 600 உயர்த்த வேண்டியும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருள்களையும் கரோனா காலம் முழுவதும் இலவசமாக ஒரே நாளில் வழங்கிட வேண்டும், அங்கன்வாடி மையங்கள் மூலம் முதியவர்கள் மட்டும் பெண்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், இது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.