/

மதுரையில் திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை காமராஜபுரத்தில் முன்விரோதம் காரணமாக திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீட்டில் 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர்.

News image
திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Updated On :27 ஜனவரி 2024, 5:01 pm

DIN

மதுரை காமராஜபுரத்தில் முன்விரோதம் காரணமாக திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீட்டில் இன்று காலை 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்திச் சென்றனர்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவரது தரப்பினருக்கும் அதிமுக முன்னாள் மண்டலத் தலைவராக இருந்த ராஜபாண்டி என்பவரின் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக 10 ஆண்டுகளாக மேலாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதில் பழிக்குப் பழியாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சிறை சென்று திரும்பிய வி.கே.குருசாமி, அவரது உறவினர் இறப்பிற்கு கீரைத்துறை பகுதிக்கு வந்திருப்பதாகத் தகவல் பரவியது.

இதையறிந்த ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், செவ்வாயக்கிழமை காலை 6 மணியளவில் காமராஜபுரத்தில் உள்ள வி.கே.குருசாமி வீட்டின் நுழைவுவாயில் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசினர். அதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், சேர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களை கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

Story image

தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அதில் ராஜபாண்டி தரப்பினர் வி.கே.குருசாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர் மதுரையில் இல்லை என்பதையறிந்து, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி, வாகனங்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மேலும், கீரைத்துறை காமராஜபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தேடி வருகிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.