அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வியத்நாமில் புதிதாக 45 பேருக்கு தொற்று

வியத்நாமின் டா நாங் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

வியட்நாமில் புதிதாக 45 பேருக்கு தொற்று

Updated On :31 ஜூலை 2020, 6:54 am

PTI

வியத்நாமின் டா நாங் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியத்நாமில் மூன்று மாதத்திற்கு பிறகு கடந்த வாரம் டா நாங் மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அந்த மருத்துவமனையின் தொடர்பில் இருந்த பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் டா நாங் மருத்துவமனை ஊழியர்கள், தற்போது சிகிச்சைப் பெறும் நோயாளிகள், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆவர்.

இதனால் டா நாங் பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது.

இன்று அங்குள்ள ஒரு விளையாட்டு அரங்கில் தற்காலிக மருத்துவமனை ஒன்றை கட்டும் பணி தொடங்கியுள்ளனர். மேலும், இந்த நகர மக்களுக்கு உதவ மற்ற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் இங்கு வரவழைக்கப்பட உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.