ஆம்பூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி பலி
ஆம்பூர் அருகே கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி உயிரிழந்தார்.


ஆம்பூர் அருகே கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் மேஸ்திரி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த பெரியவரிகம் பகுதியில் வசித்துவருபவர் குமரன், இவருடைய பழைய வீடு ஒன்று இடிக்கப்பட்டு புது வீடு கட்டும் பணியில் ஆம்பூர் அடுத்த வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பலராமன் (வயது 57) மற்றும் கட்டடத் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து கட்டட மேஸ்திரி மீது விழுந்ததில் அந்த இடத்திலேயே பலராமன் உயிரிழந்தார்.
உமராபாத் காவலதுறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்து இறந்த பலராமனுக்கு மனைவி பெயர் சரளா, மகள் பெயர் ஜெயந்தி, மகன்கள் ராஜேந்திரன், சேட்டு (எ) குமார் ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...